AUSvsWI.. 29 பந்தில் சதம்.. உலகசாதனை வீரருக்கு அழைப்பு.. புதிய முயற்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்

0
2233
Smith

தற்போது உலக கிரிக்கெட்டில் பெரிய அணிகளில், மாறிவரும் கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது.

மேலும் பெரிய கிரிக்கெட் அணிகளான இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகள் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி, பணிச்சுமை மேலாண்மையை செய்ய வேண்டி இருக்கிறது. வீரர்கள் தொடர்ந்து விளையாட முடியாது.

இதற்காக நிறைய புதுமுக வீரர்கள் பெரிய அணிகளில் உள்வாங்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் உலகக் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் வந்திருக்கிறார்கள்.

உதாரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக வந்த ஜெய்சுவாலுக்கு, ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி நிறைய புதுமுக வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பை கொடுத்து, அவர்களை அனுபவப் படுத்தி தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்படுகிறது.

இந்த அடிப்படையில் தற்பொழுது அடுத்த மாதம் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு ஜாக் பிரேசர் இளம் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா அழைத்துள்ளது. இவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 29 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். மேலும் சேவியர் பார்க் லைட் எனும் இன்னொரு இளம் வீரருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

இந்த அணியை ஸ்மித் கேப்டனாக வழி நடத்துகிறார். மேலும் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஸ் போன்ற கூட்டணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி :

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், லான்ஸ் மோரிஸ், மாட் ஷார்ட் மற்றும் ஆடம் ஜாம்பா