ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைகள் ரூல்ட் அவுட்.. உலக கோப்பை கேள்விக்குறி.. சூறாவளி வேக வீரருக்கு வாய்ப்பு!

0
2685
Australia

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு தற்பொழுது ஓய்வில் இருந்து வருகிறது!

இந்த நிலையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதல் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 30ஆம் தேதி துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் செப்டம்பர் 7ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி இந்தியாவில் உலகக்கோப்பைக்காக பயிற்சி பெறும் விதமாக, இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதே சமயத்தில் இந்தத் தொடரில் இருந்தும் உலகக் கோப்பைக்கும் மார்னஸ் லபுஷன் கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பெரிய போட்டிகளுக்காகவே கிரிக்கெட் விளையாடும் மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் முதுகெலும்பான ஸ்டீவன் ஸ்மித் இருவரும் காயங்களால் தென் ஆப்பிரிக்க இரு தொடர்களில் இருந்தும் ரூல்ட் அவுட் ஆகி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பதிலாக டி20 தொடருக்கு ஆஸ்டன் டர்னரும், ஒருநாள் தொடருக்கு தற்பொழுது இங்கிலாந்தில் 100 பந்து போட்டியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷன் இருவரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தரப்பில், ஆசஸ் தொடரின் பணிச்சுமை காரணமாக கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்வது சரியாக இருக்கும் என்றும், அதற்குள் இவர்களது காயம் குணமடைந்து விடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா டி20 அணி:
மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மாக்ஸ்வெல் சங்கா, மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.