தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விரும்பவில்லை என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேற்று நான்காவது நாளில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. இதை டக் அவுட்டில் இருந்த விராட் கோலி ரோஹித் கம்பீர் ஆகியோர் கொண்டாடினர். தற்போது இது குறித்து நாதன் லயன் பேசியிருக்கிறார்.
எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசினோம்
இதுகுறித்து நாதன் லயன் பேசும்பொழுது “ஆமாம் நாங்கள் இது குறித்து எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமில் ஆச்சரியமாக விவாதித்தோம். நாங்கள் இந்த டெஸ்டில் நல்ல முறையில் விளையாடுகிறோம். ஆனால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பது எங்களுக்கு விரக்தியை உண்டாக்குகிறது. ஆனாலும் நாங்கள் இன்னும் 185 ரன்கள் முன்னிலையில் இருக்கிறோம். மேற்கொண்டு நாங்கள் சீக்கிரம் ரன் எடுத்து மீண்டும் வெற்றிக்காக விளையாட முடியும். ஆனால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்” மீண்டும் பேட்டிங் செய்வதை விரும்பவில்லை.
“வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நம்மால் கட்டுப்படுத்த முடிந்தது நம்முடைய செயல்களை மட்டும்தான். குறிப்பாக பும்ராவுக்கு எதிராக எப்படி விளையாடுவது என்பது நாம் கட்டுப்படுத்தக்கூடிய விஷயமாக இருக்கிறது. அவர் இந்த தொடர் முழுக்க மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்”
அஸ்வினுக்காக தலையை சொறிய வேண்டியதுதான்
“சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 538 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் அஸ்வின் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து நான் தலையை சொறிந்து கொண்டு இருந்தேன். ஆனால் அதே சமயத்தில் உங்களிடம் ஜடேஜா போன்ற ஒருவர் இருக்கிறார். எனவே இது ஒரு நல்ல தலைவலி”
இதையும் படிங்க : சிராஜ் டிஎஸ்பியா இருக்கலாம்.. ஆனா பும்ராவுக்கு இதை செய்வது நியாயமே இல்லை – ஹர்பஜன் சிங் பேட்டி
“அஸ்வின் மீது மரியாதையை தவிர வேறு ஒன்றும் கிடையாது. களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடந்து கொண்ட விதம் மற்றும் அவரது திறமை மிகவும் சிறப்பானது. எங்களுக்குள் பல்வேறு விஷயங்களில் சரி தவறு என வெவ்வேறு கருத்துக்கள் இருக்கிறது. இப்படியான விஷயங்கள் தேவை. அவருடனான உரையாடல் அற்புதமானது” என்று கூறியிருக்கிறார்.






