அழுது புலம்பாதீங்க குழந்தைகளா! இங்கிலாந்தை பங்கமாக கலாய்த்த ஆஸி ஊடகம்.. ஸ்டோக்ஸ் பதிலடி

0
288

ஆசஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேரிஸ்ட்ரோவை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்த விதம் வெறும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஓவர் முடிந்தவுடன் கிரீசை விட்டு வெளியே வந்த உடன் ஜானி பாரிஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்தார். இது இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணி stokes இப்படி தான் வெற்றி பெற வேண்டும் என்று இருந்தால் நான் இதை செய்திருக்கவே மாட்டேன்.

- Advertisement -

அப்படிப்பட்ட வெற்றியை எனக்கு தேவையில்லை. கம்மின்ஸ் இடத்தில் நான் இருந்திருந்தால் இதை அவுட் கேட்டிருக்கவே மாட்டேன். அப்படி நடுவர் அவுட்டு கொடுத்து இருந்தாலும் அதனை திரும்ப பெற்று இருப்பேன் என்றும் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம், ஆஸ்திரேலியா ஏமாற்று வேலையை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் அணியை விமர்சிக்கும் விதமாக இந்த தோல்வியை நினைத்து குழந்தை போல் புலம்புவதாக ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்டோக்ஸ் அழுகும் குழந்தை என்று விமர்சித்து அவரை குழந்தை போல் சித்தரித்து செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டோக்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் நிச்சயமாக இது நான் கிடையாது. ஏனென்றால் நான் எப்போது புது பந்தில் வீசினேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கம்மின்ஸ் இன்ஸ்டாவில் புது பந்தில் பந்தை வீசுவார். இதனால் இது கம்மின்ஸ் தான் என்பதை போல் பென்ஸ் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதேபோன்று இந்த விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியாவின் இந்த விளையாட்டு கிரிக்கெட்டின் ஸ்பிரிட் எதிரானது என்று விமர்சித்திருக்கிறார். எனினும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தங்கள் நாட்டின் முழு ஆதரவு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஆல்பானிஸ் கூறியிருக்கிறார்.