60 ரன்ஸ்.. சச்சினின் மகத்தான சாதனையை முந்திய ஸ்டீவ் ஸ்மித்.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி

0
248
Steve Smith and Sachin tendulkar

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமமாக முடிவடைந்த நிலையில் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியா அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் 60 ரன்கள் குவித்ததன் மூலமாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் மட்டும் குவித்த நிலையில் தடுமாற அதற்குப் பிறகு களம் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் சரிவிலிருந்து ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றினார்.

82 பந்துகளை எதிர் கொண்டு 60 ரன்கள் குவித்ததன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது 33வது அரை சதத்தை பதிவு செய்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ஏனைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பெய்த கனமழையின் காரணமாக இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதியின் படி 37.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்திருந்தாலும் ஸ்மித் 60 ரன்கள் குவித்ததன் மூலமாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனையை முறியடித்திருக்கிறார். அதாவது இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 32 அரைசதங்கள் அடித்திருக்கிறார். மூன்றாவது போட்டியில் அரை சதம் அடிக்கும் முன்பு வரை அவரது சாதனையை சமன் செய்து இருந்த நிலையில் தற்போது 33வது அரை சதம் அடித்ததன் மூலமாக அவரை முறியடித்திருக்கிறார்.

33 அரை சதங்கள் அடித்ததன் மூலமாக இலங்கை அணி ஜாம்பவான் மகேலா ஜெயவர்தனாவோடு தனது சாதனையை பகிர்ந்திருக்கிறார். ஜெயவர்த்தனா இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 33 அரைசதம் அடித்திருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 37 அரைசதங்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க:ஆப்கன் டீம்ல இந்த இந்திய வீரர்தான் விளையாடனும்.. அதுக்கு முக்கிய காரணமே இதுதான் – ஹஸ்மத்துல்லா பேட்டி

இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆலன் பார்டர் 38 அரை சதங்கள் எடுத்ததன் மூலமாக இந்த பட்டியலில் பதிவிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -