உலக கிரிக்கெட்

இந்திய அணியுடன் தோல்வி.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. உடனே கிடைத்திருக்கும் பயிற்சியாளர் பதவி.. நடந்தது என்ன?. ஆஸி மேத்யூ வேட் பதில்

ஆஸ்திரேலியா அணியின் மூத்த கிரிக்கெட் வீரரான 36 வயது மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். இவர் கடைசியாக 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வேட் ஓய்வு பெற்ற உடனேயே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பது குறித்து அதற்கான விளக்கத்தை அவரே கூறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரை இறுதியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்து வெளியேறியது. எனவே அதுவே தனக்கு கடைசி தொடராக இருப்பதாக தோன்றியதாகவும், ஓய்வு முடிவை அறிவிக்கும் நிலையில் பயிற்சியாளர் பதவி கிடைத்திருப்பது குறித்து சில முக்கிய கருத்துக்களை வேட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்த போதே என் தொழில் வாழ்க்கையில் கடைசி நிலைக்கு வந்து விட்டதாக உணர்ந்தேன். அது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. அந்த அணியில் நான் மூன்று ஆண்டுகளாக விளையாடி உருவாக்கிய உறவுகள் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. விளையாடும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு என நல்ல பிணைப்பில் இருந்தேன். எனவே இப்போது அதிகாரப்பூர்வமாக எனது ஓய்வினை அறிவிக்கிறேன்.

இதையும் படிங்க:விராட் ரோஹித் ஆட்டமே சரியில்ல.. அந்த தொடருக்கு அப்புறம் ரொம்ப அசால்டா இருக்காங்க – பாக் பாசித் அலி கருத்து

கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பங்குபெற்ற ஒவ்வொரு தொடரிலும் பயிற்சியாளர் பணியில் சேர இருப்பது குறித்து விவாதித்தோம். தலைமை தேர்வாளர் ஜார்ஜ் டெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்டு மெக்டொனால்ட் ஆகியோருடன் ஆறு மாதங்களாக 2024 டி20 உலக கோப்பை முடிந்ததில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை 2024ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியா பணிக்கு அடுத்ததாக நடைபெற உள்ள பாகிஸ்தான் தொடரில் வேட் பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by