ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பின்னர் ஆக கருதப்படும் ஆடம் ஜம்பா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதன் மூலமாக தனது நூறாவது ஒரு நாள் போட்டியில் விளையாட காத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்காக நான் இவ்வளவு ஆண்டுகள் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
2016ஆம் ஆண்டு லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக முதன் முதலில் விளையாடுவதற்கு அறிமுகம் ஆகிறார். அதிலிருந்து தொடர்ச்சியாக இதுவரை 99 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 169 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் 92 டி20 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு மிடில் ஓவர்களில் இவரது முத்திரை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர முதல் தரப் போட்டி, லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் பிரான்ஸ் டி20 தொடர்கள் என அனைத்திலும் தனது பந்துவீச்சு திறனை நிரூபித்து வருகிறார்.இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது நூறாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவது குறித்து ஆடாம் ஜம்பா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது எனக்கு நிறைய அர்த்தமுள்ள உணர்வாக இருக்கிறது. நான் ஆஸ்திரேலியா அணிக்காக இவ்வளவு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் தொடர்கள் விளையாடி அதில் வெற்றி பெறுவதை காட்டிலும் சொந்த நாட்டிற்காக விளையாடி அதில் வெற்றி பெறும் அனுபவம் மிகவும் அற்புதமானது.நான் இங்கிலாந்தில் நடைபெறுகிற ஹன்ட்ரெட் தொடரில் விளையாட விரும்பினேன்.
அந்த அனுபவம் நன்றாக இருந்தது, அதில் விளையாட விரும்பினேன். இறுதியில் வெற்றி பெறுவது என்பது கூடுதல் போனஸ். ஆனால் உங்கள் நாட்டிற்காக விளையாடும்போது, நீங்கள் உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த உணர்வு அதைவிட மிகவும் வித்தியாசமாக இருக்கும். இன்னும் பல தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற அது ஒரு பெரிய உத்வேகமாக இருக்கும்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க:பங்களாதேஷ் டெஸ்ட்ல வேறமாறி பாப்பீங்க.. விராட் அந்த பவுலருக்கு எதிராவே தான் யாருனு காமிச்சிருக்காரு – ரெய்னா பேட்டி
தி ஹண்ட்ரட் 2024 நடைபெற்ற தொடரில் ஓவர் இன்விசிபில் அணி பட்டத்தை தக்க வைத்ததில் ஆடம் ஜம்பாவிற்கு பெரும் பங்கு உண்டு. தனது சிறப்பான பந்துவீச்சின் மூலமாக நிறைய போட்டிகளை ஓவல் அணிக்காக வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.