இந்தியா ஒரே மைதானத்தில் ஆடுது.. பெரிய நன்மை கிடைக்குது – ஐசிசி முடிவுக்கு கம்மின்ஸ் எதிர்ப்பு

0
873
Cummins

இந்திய அணி ஒரே மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாடுவதால் மற்ற அணிகளை விட பெரிய அளவில் பயன் அடைவதாக ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அதே சமயத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததால் தான் போட்டிகள் அனைத்தையும் துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து விளையாடுகிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகத்தை உருவாக்குவதாக தற்போது பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் சிக்கல்

இந்த முறை ஆஸ்திரேலியா தங்களது முக்கியமான ஆறு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்மித் தலைமையில் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அவர் ஆஸ்திரேலியாவின் ஒரு வானொலிக்கு பேட்டி அளித்த பொழுது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சாதகம் குறித்தும், மேலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவதை விட இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் ஆசஸ் டெஸ்ட் தொடர்தான் மிகவும் பெரியது எனவும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சாதகம்

இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறும்போது “தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு பெரிய நன்மையை தருகிறது. ஏற்கனவே அவர்கள் மிகவும் வலிமையான அணியாக தெரிகிறார்கள். இத்தோடு ஒரே இடத்தில் விளையாடுவதால் வெளிப்படையான பலன்களையும் பெற்று வருகிறார்கள்”

இதையும் படிங்க : 61.50.. பாகிஸ்தான் போய் ஜெயிச்சாதான் வெற்றியா?.. பிரஸ் மீட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி பதில்

“என்னுடைய ஞாபகத்தில் எப்பொழுதும் இருக்கும் அளவுக்கு சிறப்பான கோடை காலம் அமைந்தது. இந்திய அணி எங்கள் மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. இந்த முறை அவர்களுக்கு எதிராக நாங்கள் எங்கள் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது சிறப்பானது. ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாக இருந்தது. இருந்த போதும் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆசஸ் டெஸ்ட் தொடரை இழந்தால் ஏதோ உலகமே முடிந்து விட்டது போல சூழ்நிலை மாறுகிறது. இந்த வகையில் இந்த தொடர்தான் இந்திய தொடரை விட பெரியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -