61.50.. பாகிஸ்தான் போய் ஜெயிச்சாதான் வெற்றியா?.. பிரஸ் மீட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி பதில்

0
1252
Shreyas

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான பதில் அளித்திருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று மோதிக்கொண்டன. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் கூட இந்தியா தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த கேள்வி ஸ்ரேயாஸ் ஐயரிடம் முன்வைக்கப்பட்ட பொழுது அவர் அதற்கு மிகவும் சமயோசிதமாக சிறப்பான பதில் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயரின் சராசரி

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் அவருடைய ரன் சராசரி 61.50 என மிகச் சிறப்பாக இருக்கிறது. நேற்றைய போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து மிகப் பொறுமையாக சூழ்நிலைக்கு தகுந்தது போல் ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து செட்டில் ஆனதும் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடி காட்டினார். இதன் காரணமாக ஒரு முனையில் விராட் கோலி தாக்கி விளையாட தேவை இல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட ரோலை பொறுமையாக செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற அருகில் இருந்த பொழுது ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த பதில்

நேற்று வெற்றிக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தானில் விளையாடி வெற்றி பெற்றிருந்தால் மிகவும் இனிமையாக இருந்திருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரேயாஸ் ஐயர் ” நான் இதுவரையில் பாகிஸ்தானில் ஒரு போட்டி கூட விளையாடியது கிடையாது. அதனால் அங்கு விளையாடி வெற்றி பெற்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் நாள் முடிவில் துபாய் இரு அணிகளுக்கும் நடுநிலையான இடமாக இருந்தது. இது ஒரு வித்தியாசமான சவால் ஆகும். மேலும் நாங்கள் துபாயில் அதிகம் விளையாடியதும் இல்லை”

இதையும் படிங்க : விராட் கோலி கிட்ட அதை பார்த்து ஆச்சரியமா இருக்கு.. நாங்க மொத்தமா நின்னும் முடியல – ரிஸ்வான் பாராட்டு

“இறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்த இடத்தில் எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அது மிகவும் மகிழ்ச்சியானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அது மிகவும் அழுத்தம் நிறைந்த வித்தியாசமான போட்டியாக அமைகிறது. நான் இந்த போட்டியை ரசித்து விளையாடினேன். இது பாகிஸ்தானுக்கு எதிராக எனது மூன்றாவது ஆட்டமாக இருந்தது. மேலும் வேடிக்கையாகவும் அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -