இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 256.52 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நடையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஷார்ட் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு ஆறு ஓவர்களில் 86 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். ஒரு சில ஓவர்கள் மட்டும் நிதானம் காட்டினாலும் அதற்குப் பிறகு வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் ஷாம் கரண் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து நொறுக்கினார்.
இதில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களும் அடக்கம். 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு எட்டு பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 258 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சார்ட் 26 பந்துகளில் 41 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்பரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 179 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது.
பட்லர் காயத்தின் காரணமாக இந்த தொடரில் இருந்து விலக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இங்கிலாந்து அணியை வழி நடத்தினார். கேப்டன் சால்ட் 20 ரன்கள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் ஆறு ரன்னில் வெளியேற, இதில் மிடில் ஆட்டக்காரர்கள் லிவின்ஸ்டன் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடிய 24 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணியினர் வரிசையாக விக்கட்டுகளை விட இறுதியாக இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதையும் படிங்க:நம்மள பார்த்து இந்திய டீம் பயப்படுறது கிடையாது.. இத ஆரம்பிச்சதே விராட் கோலிதான் – ரிக்கி பாண்டிங் பேச்சு
இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இந்தத் தொடரில் தற்போது முன்னிலை வகிக்கிறது. இதில் பந்து வீச்சில் அதிக பட்சமாக சீன் அப்போட் 3.2 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.