“ஆறாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்த ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி”!

0
955

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

எட்டாவது மகளிர் டி20 உலக கோப்பை போட்டி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்தது . பட்டு அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன . முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இன்று தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நியூ லேண்ட் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தாலும் அந்த அணியின் பெத் மூனீயின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்களை எடுத்து பாரு விக்கெட்டுகளை இழந்திருந்தது . சிறப்பாக ஆடிய பெத் மூனீ 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் ஒன்பது பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும் . அஷ்லே கார்ட்னர் அவருக்கு உறுதுணையாக ஆடி 29 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் சப்னிம் இஸ்மாயில் இரண்டு விக்கெட்டுகளையும் மரிசனா காப் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கைலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்து 19 ரன்களில் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா அணி . அந்த அணியின் லாரா வால்வார்ட் அதிகபட்சமாக 48 பந்துகளில் 61 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் ஐந்து பௌண்டரிகளும் அடக்கம். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அஷ்லே கார்ட்னர் , டார்சி பிரவுன்.ஜெஸ் ஜோன்ஸசென், மேகன் ஸ்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் . இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது .

2010 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹாட்ரிக் உலகக் கோப்பை வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா அணி தற்போது 2018,2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் பேட்டிங்கின் மூலம் சிறப்பாக பங்களிப்பை வழங்கிய பெத் மூனீ ஆட்ட நாயகி விருதை பெற்றார். இந்தத் தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் மூலம் வழங்கிய அஷ்லேயி கார்ட்னர் தொடர் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -