இந்திய கிரிக்கெட்

நல்லவேல..பும்ராகிட்ட இருந்து தப்பிச்சேன்.. இல்லனா நிலைமை மோசமாகி இருக்கும் – பேட் கம்மின்ஸ் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-1என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய நட்சத்திர பவுலர் பும்ராவை எதிர் கொண்ட விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்கி இருக்கிறது. எனவே அடுத்ததாக நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து தோல்வி அடையாமல் சொந்த நாடு திரும்பும். இந்திய அணியில் பும்ரா தொடர்ந்து தனது அபார பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 30 விக்கட்டுகள் அவர் வீழ்த்தியிருக்கும் நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் பும்ராவின் பந்துவீச்சை பெரிதாக எதிர்கொள்ளாததே தான் ரன்கள் குவிக்க காரணம் என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா இதை செய்யவில்லை

இது குறித்து அவர் கூறும் பொழுது “இக்கட்டான சூழ்நிலைகளில் பும்ரா எப்போதுமே நன்றாக பந்து வீசுவார். அவரை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான ஒன்றாகும். நல்ல வேலையாக நான் உள்ளே வரும்போது பும்ரா சற்று தாமதமாக பந்து வீசத் தொடங்கினார். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. நான் ஓரளவு நன்றாக விளையாட அதுவே ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதுமே சவால் அளிக்கக் கூடிய ஒரு பந்துவீச்சாளர். அவரை நான் உலகம் முழுவதிலும் மூன்று வகையான தொடர்களிலும் எதிர்கொண்டு இருக்கிறேன். எப்போதும் எதிரணிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்குவதில் அவர் வல்லவர்” என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் டிரெஸ்ஸிங் ரூம் விவகாரம்.. 2014ல் கேப்டன் தோனியின் மாஸ் முடிவு.. தப்பித்த இந்திய அணி.. என்ன நடந்தது.?

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று தொடரை இழக்காது என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதனை நிறைவேற்றிக் காட்டுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -
Published by