கம்பீர் டிரெஸ்ஸிங் ரூம் விவகாரம்.. 2014ல் கேப்டன் தோனியின் மாஸ் முடிவு.. தப்பித்த இந்திய அணி.. என்ன நடந்தது.?

0
30
Gambhir and Dhoni

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. குறிப்பாக மெல்போர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை டிரா செய்யும் நிலையில் இருந்தது.

கடைசி நாளில் தேநீர் இடைவெளிக்கு பிறகு இந்திய அணி கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஒரு ஷார்ட் ஆடி ஆட்டமிழந்தார். அதன் பிறகு மற்ற இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பயிற்சியாளர் கம்பீர் அதிருப்தி :

இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடர் சமனில் முடியும். இந்த நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் பயிற்சியாளர் கம்பீரை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.

ரிஷப் பண்ட் ,விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருவது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது குறித்து பயிற்சியாளர் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதுக்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கம்பீர் பேசியதாக அனைத்து இணையதளத்திலும் செய்திகள் வெளியானது. இதற்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

கேப்டனாக இருந்த போது தோனி செய்த சாதுரியம்

இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் சம்பவம் வெளியே எப்படி வருகிறது. இல்லை இது உண்மையாகத்தான் நடந்ததா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இதேபோன்று இந்திய அணி குறித்து ஒரு செய்தி வந்தது.

அப்போது செய்தியாளர்கள், தோனியிடம் இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதாமே? அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.இதற்கு பதில் அளித்த தோனி, இப்படி சொந்தமாக கதை எழுதுபவர்கள் திரைப்படத்தில் பணி புரியலாம் என்று கிண்டல் அடித்தார். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் செய்தியாளர்களுக்கு இடமில்லை என்றும் தோனி கூறினார். அந்த பேட்டியில் பேசிய தோனி,தற்போது செய்தியாளர்கள் சகட்டுமேனிக்கு கதை எழுதுகிறார்கள். குறிப்பாக ஷிகர் தவானை விராட் கோலி குத்திவிட்டதாகவும், அதனால்தான் நாங்கள் தவானை முதலில் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை என்றும் ஒரு செய்தியில் நான் பார்த்தேன்.

இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட்.. மழையால் இந்திய அணிக்கு சிக்கல்.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்.?.. WTC பைனல் வாய்ப்பு விவரம்

இப்படி கதை எழுதுபவர்கள் எல்லாம் ஹாலிவுட்டில் உள்ள மார்வெல் நிறுவனம் இல்லை வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தில் இணைந்து கதை எழுத வேண்டும்.அவர்கள் இதை ஒரு நல்ல படமாக எடுப்பார்கள். இல்லை இப்படி நடக்கிறது என்று உங்களிடம் யார் சொல்கிறார்கள் என்பதாவது எனக்கு சொல்லுங்கள். அப்படிப்பட்ட நபர் எங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்க தகுதி கிடையாது. நடக்காத விஷயத்தை அப்படி சொல்லும் நபர் சினிமா துறையில் தான் கதை ஆசிரியராக இருக்க வேண்டும் என்று தோனி காட்டமாக பதில் அளித்தார்.அதன் பிறகு இந்திய அணியை பத்திரிக்கையாளர்கள் சீண்டாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -