“ஆஸ்திரேலியா ஜெயிக்கவே கூடாது.. விடவே மாட்டேன்!” – சுப்மன் கில் வெளிப்படையான அதிரடி பேட்டி!

0
850
Gill

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு எப்பொழுதும் பெரிய மதிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே இருக்கும்.

சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட் வடிவத்தின் எழுச்சி மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு வரவேற்பு பழையபடி இருக்குமா? என்கின்ற சந்தேகம் இருந்தது.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவ உலகக் கோப்பைக்கு தரும் வரவேற்பை இந்த முறையும் குறைக்கவில்லை. மேலும் எந்த உலகக் கோப்பை தொடரை விடவும் இந்த உலகக் கோப்பையை பெரிய வெற்றியடைய வைத்திருக்கிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மட்டும் தான் பல உணர்வுபூர்வமான சம்பவங்களை உள்ளடக்கிய நினைவாக ரசிகர்களிடையே தங்கி இருக்கிறது.

எனவே எந்த ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தாலும், கிரிக்கெட்டுக்குள் புதிதாக வரும் ரசிகர்களுக்கு அவர்கள் ஞாபகத்தில் எப்பொழுதும் தங்கும் உணர்வுபூர்வமான விஷயங்கள் இருக்கும். எனவே ரசிகர்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோடு எப்பொழுதும் மிகுந்த மனநெருக்கத்தில் இருப்பார்கள்.

- Advertisement -

இது கிரிக்கெட் ரசிகர்கள் என்று மட்டும் இல்லாமல், கிரிக்கெட் வீரர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் எல்லா கிரிக்கெட் வீரர்களும் இளம் வயதில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோடு உணர்வபூர்வமான இணைப்பை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்கள் பழைய உலகக் கோப்பை நினைவுகளை சுமந்து கொண்டுதான் நிகழ்காலத்தின் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள். எனவே ரசிகர்களைப் போலவே வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பெரிய முக்கியத்துவத்தை கொடுப்பார்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கூறும் பொழுது “என் சிறுவயதில் இருந்தே ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை நான் முற்றிலும் வெறுக்கிறேன். ஆஸ்திரேலியா தோற்க வேண்டும் என்று எப்பொழுதும் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவுடன் விளையாடும்போது அவர்களை எப்படியாவது வீழ்த்தி விட மட்டுமே நான் முயற்சி செய்வேன்!” என்று கூறி இருக்கிறார்!