“ஆஸ்திரேலியா இந்த முறை ஸ்பீடு மீட்டரில் எங்களை ஏமாற்றியது” – ஷாகின் அப்ரிடி குற்றச்சாட்டு!

0
407
Shaheen

சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த மூன்று போட்டியையும் தோற்று முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்து பாகிஸ்தான் நாடு திரும்பியது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி விளையாடினார். அவர் 41 என்கின்ற சராசரியில் இரண்டு போட்டிகளில் 8 விக்கெட் கைப்பற்றினார். சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக இழந்திருந்த பொழுதும் கூட, அந்த அணி வேறு ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அது அவர்கள் பந்து வீசிய குறைவான வேகத்திற்கு விமர்சிக்கப்பட்டார்கள்.

வேகப்பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா மைதானங்களில் சராசரியாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வீசினார்கள் என்பதாக ஸ்பீடோ மீட்டரில் காட்டியது. அவர்களால் அதைத் தாண்டி போக முடியவில்லை. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி வீசினார்கள் என்பதாக ஸ்பீடோ மீட்டரில் காட்டப்பட்டது.

இது பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற்ற பொழுது பெரிய விமர்சனத்திற்கு பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்தது. அவர்கள் தங்களின் வேகத்தை தாமாகவே குறைத்து விட்டதாகவும், இது சரியான அணுகுமுறை கிடையாது என்றும் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக அந்த நாட்டில் டி20 தொடரில் கேப்டனாக முதல் முறையாக விளையாட இருக்கும் ஷாகின் அப்ரிடி இது குறித்து கூறும் பொழுது “உண்மையை சொல்வதென்றால் நாங்கள் ஸ்பீடு மீட்டரை பார்த்து ஆச்சரியப்பட்டோம். இது நாங்கள்தானா? என்பது போல இருந்தது. நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் எங்களுடைய வேகம் ஸ்பீடு மீட்டரில் உயரவில்லை.

எப்பொழுது நாங்கள் பந்து வீசினாலும் 130 முதல் 132 கிலோமீட்டர் என்பதாகவே காட்டியது. நாங்கள் இந்த வேகத்தை தாண்ட மாட்டோம் என்பதாக காட்டுவதற்கு, ஏற்கனவே ஸ்பீடு மீட்டரில் இப்படி திட்டமிட்டு செட் செய்யப்பட்டதாக நாங்கள் நினைத்தோம்.

பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையான விஷயம். மேலும் கேப்டனாக அணியை வழிநடத்த இருப்பது எளிதானது அல்ல. இது ஒரு புதிய சவால். நியூசிலாந்துக்கு எதிராக அவர்களது நாட்டில் நாங்கள் சிறந்த சாதனைகளை செய்திருக்கிறோம். ஆனாலும் அவர்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒருவர். நாங்கள் எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்!