3 மாதத்தில் டி20 உலககோப்பை.. அதற்கு முன்னால் இந்திய அணிக்கு எத்தனை பயிற்சி போட்டிகள்.?.. முழு தகவல்கள்

0
1182

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதற்கான மைதானங்களை இரு நாடுகளும் மிகத் தீவிரமாக தயார்படுத்தி வரும் நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளும் பங்குபெறும் பயிற்சிப் போட்டிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இதில் உள்ள 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் டேபிள் டாப் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறும். இந்த நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

- Advertisement -

இதில் இந்திய அணி பங்கேற்கும் குழுவில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. இதில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆக தலைமை தாங்குகிறார். துணைக் கேப்டன் ஆக ஹார்திக் பாண்டிய செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

மே 1ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவிக்க வேண்டும். இருப்பினும் மே 25ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்படலாம். ஆனால் அதற்குப் பிறகு எந்த ஒரு மாற்றமும் ஐசிசி தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாம்பியன் பட்டத்தைப் பெறும் அணிக்கான பரிசுத்தொகை பின்னர் அறிவிக்கப்படும்.

இதில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ரசிகர்களையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் இரண்டாம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகளும் இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு அணியும், ஏதேனும் இரண்டு அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் பங்கு பெறலாம். இதில் இந்திய அணியும் இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. பயிற்சி போட்டியில் இந்திய அணி மோத உள்ள இரு அணிகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தொடங்க உள்ள உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அயர்லாந்து அணியையும்,ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் அணியையும், 12-ஆம் தேதி அமெரிக்க அணியையும், 15 ஆம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.

இதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகத்தீவரமாக தயாராகி வருகிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு இம்முறை எப்படியாவது கோப்பையை வென்றாகி விட வேண்டும் என்ற முனைப்பில் மிகத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் இந்திய அணி வீரர்கள் தயார் ஆக சிறந்த தொடராக இருக்கும்.