WTC பைனல்.. இங்கிலாந்து ரசிகர்கள் எங்களுக்கு இதை செஞ்சா.. நான் ஆச்சரியப்பட மாட்டேன் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ்

0
84

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான ஆதரவு குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் ஆஸ்திரேலியா அணி வலுவான இந்திய அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக போட்டி லண்டன் லாரட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இரண்டு நாட்டு ரசிகர்களுக்கும் அதிக போட்டித் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் இந்த போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் தென் ஆப்பிரிக்கா அணியை ஆதரிப்பார்கள் என ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஒப்புக்கொண்டார். பெரும்பாலும் ரசிகர்கள் இங்கிலாந்து அணியை ஆதரிப்பது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது எனவும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நடுநிலையான ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க அணியை ஆதரிப்பார்களா? என்பது தெரிந்து கொள்வது கடினம். லண்டனில் நிறைய ஆஸ்திரேலியா ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு ஆதரவு சிறப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அதே போல லண்டனில் அதே அளவு தென்னாப்பிரிக்க ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெல்லப்போவது யார்? தென்னாப்பிரிக்கா? ஆஸ்திரேலியா? – முன்னாள் வீரர்கள் கருத்து

அதேபோல இங்கிலாந்து அணியும் தென்னாபிரிக்க அணியை ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நாங்கள் காத்திருந்து பார்ப்போம்” என கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கிறார். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி மாலை 3 மணி அளவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலிய அணியும், முதல் முறையாக பட்டத்தை கைப்பற்ற தென்னாப்பிரிக்கா அணியும் போட்டி போடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமானதாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -