உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெல்லப்போவது யார்? தென்னாப்பிரிக்கா? ஆஸ்திரேலியா? – முன்னாள் வீரர்கள் கருத்து

0
101

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

வரலாற்று சாதனை படைக்க வேண்டிய உத்வேகத்தில் தென்னாப்பிரிக்க அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணியும் போட்டி போடும் என்பதால் இது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில்,  இந்த போட்டியில் இரு அணிகளும் உள்ள பலம் பலவீனம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக பாட் கம்மின்ஸ்  இருப்பார். அவர் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்.
அவருடைய தலைமை பண்பு மற்றும் பந்துவீச்சுத் திறன், இறுதியில் பேட்டிங்கில் வந்து ரன்கள் சேர்ப்பது என மூன்று பிரிவிலும் சிறப்பாக விளையாடுகிறார்.”

கம்மின்ஸ் குறித்து பாராட்டு:

“அணியை முன் நின்று வழி நடத்துகிறார். அவர் எப்போதுமே எதிரணியை நெருக்கடிக்கு ஆழ்த்துவார்” என்று கூறினார். இந்த கருத்தை ஆமோதித்த ஹர்பஜன்சிங், “கம்மின்ஸ் போன்ற கேப்டன்கள் அணியை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் வல்லவர்கள். அவர் தாம் ஒரு மேட்ச் வின்னர் என்று ஏற்கனவே பலமுறை நிரூபித்து விட்டார். ஒரு வீரரை ஒட்டுமொத்த அணியும் மதித்தால் அவர்கள் பின்னால் அனைவரும் நிற்பார்கள்.”

- Advertisement -

“இதன் மூலம் உங்களால் போட்டிகளில் வெற்றி பெற முடியும். இதனால் தான் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டனாக விளங்குகிறார். இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் நாதன் லயன் நிச்சயம் ஒரு அபாயகரமான வீரராக இருப்பார்.”

ஹர்பஜன் எச்சரிக்கை:

“குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை  அவ்வளவு ஈசியாக எதிர்கொள்ள முடியாது. நாதன் லயன் ஒரு சாம்பியன் வீரர், இங்கிலாந்து கள சூழல் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுத்தாது. தென்னாபிரிக்க அணி வெற்றி பெற வேண்டும் என்றால் டிராவிஸ் ஹெட்  விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும்.”

இதையும் படிங்க: தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. ருதுராஜ்க்கு இங்கிலாந்திலிருந்து வந்த அழைப்பு.. சரியான முடிவு எடுத்த சிஎஸ்கே கேப்டன்

“அவர் ரன்களை மட்டும் சேர்க்க மாட்டார். அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்” என்று ஹர்பஜன் சிங் கூறினார். மேலும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பான பயிற்சி மேற்கொண்டு  இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஹரபஜன், ஆசஸ் தொடரில் விளையாடிய அனுபவமும் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு கைகொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவை விட ஆஸ்திரேலியாவுக்கு தான் இங்கிலாந்தில் உள்ள கள சூழல் நன்றாக தெரியும் என்றும் ஆஸ்திரேலியா ஒரு சாம்பியன் அணி என்றும் ஹர்பஜன்சிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -