வேட்டையாடிய ஆஸ்திரேலியா.. தப்பு கணக்கு போட்ட நியூசிலாந்து.. நாதன் லயன் அசத்தல்.. பிரம்மாண்ட வெற்றி

0
287
Lyon

ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து நாட்டில் அந்த அணியோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி சில நாட்களுக்கு முன்பு வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கேமரூன் கிரீன் மட்டும் நிலைத்து நின்று 174 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணி 383 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 179 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கிளன் பிலிப்ஸ் 71 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி 204 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

போட்டியில் ஃபாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து பேக்கிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணி 164 ரன்களில் ஆட்டம் இழந்தது. நைட் வாட்ச்மேன் நாதன் லயன் மட்டும் 41 ரன்கள் எடுத்து நல்ல பங்களிப்பு தந்தார். நியூசிலாந்து தரப்பில் கிளன் பிலிப்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

நியூசிலாந்து ராணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. நேற்று மூன்று விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையுடன் திரும்பியது. களத்தில் ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் இருவரும் இருந்தார்கள்.

இன்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 196 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்தரா 59, டேரில் மிட்சல் 38 மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் எடுத்தார்கள். நாதன் லயன் ஆறு விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் 172 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : “நான் இங்க இருக்க காரணமே அவங்கதான்.. சாதனையை பார்க்க மாட்டேன் டைம் வேஸ்ட்” – ஹர்திக் பாண்டியா பேட்டி

நியூசிலாந்து திடீரென சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் இந்த திட்டத்தில் கடைசியில் நியூசிலாந்து நாதன் லயனிடம் மாட்டிக் கொண்டது . இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மூன்று இன்னிங்ஸ்களில் மட்டும் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.