U19 WC பைனல்.. போராடிய இந்திய 9வது விக்கெட்.. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது

0
357
U19wc

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்வதென அறிவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிக்ஸன் 42, கேப்டன் வெயிப்ஜென் 48, ஹர்ஜாஸ் சிங் 55, ஒலிவர் பீக் 46 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்கள் முழுமையாக விளையாடி ஏழு விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காக இது அமைந்தது.

இந்த தொடரில் அரையிறுதி சுற்றும் நடந்த அதே மைதானத்தில்தான் இறுதிப் போட்டியும் நடக்கிறது. ஆனால் இன்று சுழற் பந்து வீச்சுக்கு பெரிய சாதகம் இல்லை. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ராஜ் லிம்பானி மூன்று மற்றும் நமன் திவாரி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்து பிச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேற ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

அர்சன் குல்கர்னி 3, ஆதர்ஸ் சிங் 47, முசிர் கான் 22, உதய் சகரன் 8, சச்சின் தாஸ் 9, மோலியா 9, ஆரவல்லி அவினாஷ் 0, ராஜ் லிம்பானி 0 என இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை 122 ரன்களுக்கு இழந்துவிட்டது.

இதற்கு அடுத்து தாக்குப்பிடித்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு விளையாடிய முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக இரண்டு ரன்கள் எடுத்து சௌமை பாண்டே ஆட்டமிழந்தார். ஆட்டம் இழக்காமல் நமன் திவாரி 14 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : “இந்திய செலக்டர்ஸ்.. இனி ஸ்ரேயாஸ் ஐயர பெருசா நினைக்கிறத விட்டு.. இவர மதிங்க” – ஆஸி லெஜன்ட் பேச்சு

இறுதியாக இந்திய அணி 43.5 ஓவரில் 174 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அண்டர் 19 உலக கோப்பை தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் தரப்பில் பியர்ட்மேன் மற்றும் ராப் மெக்மிலன் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.