இந்தியா என்னை ஆசை காட்டி சிக்க வைத்தது.. பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் கருத்து

0
1415

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு அளவுக்கு ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடும் வீரர் என்றால் அது பீட்டர் ஹான்ஸ்கோம்ப் தான். இந்தியாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பீட்டர் ஹான்ஸ்கோம்ப், இந்திய ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை சிறப்பாக செய்து காட்டினார்.

- Advertisement -

இந்த நிலையில் தனது இரண்டாவது சுற்று பயணமாக இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லி டெஸ்ட் போட்டிகள் அபாரமாக விளையாடி முதல் இன்னிங்சில் 72 ரன்கள் சேர்த்தார். இது குறித்து பேசிய அவர் சுழற் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நான் ரஹானே விடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். என்னுடைய முதல் சுற்று பயணத்தில் ரஹானே சுழல் பந்துவீச்சை எப்படி விளையாடினார் என்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பேக் புட்டில் நின்று மிட்விக்கெட் திசையில் அவர் ரன்களை அடித்தார். இதை பார்க்கும் போது எனக்கு யாராவது இந்த யுத்தியை எனக்கு கற்றுக் கொடுங்களேன் என்று தோன்றியது. ரகானே இந்த யுக்தி மூலம் சுழற் பந்துவீச்சை தற்காத்துக் கொள்ளவும் அதே நிலையில இருந்து ரன் சேர்க்கவும் முடியும். டெல்லி டெஸ்ட்டில் என்னை இந்தியா சுலபமாக வீழ்த்தி விட்டார்கள். நான் ரன் அடிக்க ஏதுவான வழியை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் நான் மிகவும் பொறுமையாக நின்று பவுண்டரிகளை அடிக்காமல் வெறும் சிங்கிளாக ஓடி ரன்கள் சேர்த்தேன். ஆனால் அவர்கள் சுலபமாக பவுண்டரி அடி என்று என் ஆசையை தூண்டும் வகையில் சுலபமான பந்தை வீசினார்கள். இந்தியா விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன்.

டெல்லி டெஸ்டில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முதலில் நான் தற்காப்பு ஆட்டத்தை தான் ஆடினேன். அடுத்த டெஸ்டில் நான் மனதளவில் வலுவாக இருந்து மீண்டும் எனது இன்னிங்சை தொடங்க வேண்டும். நான் 72 ரன்களில் இருந்து மீண்டும் எனது ஆட்டத்தை தொடங்குகிறேன் என நினைத்துக் கொண்டு விளையாடலாம். ஆனால் இந்திய ஆடுகளங்களில் நாம் அப்படி செய்ய முடியாது. நாங்கள் எங்களுடைய பேட்டிங்கை நம்புகிறோம். டெல்லி டெஸ்டில் எங்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடந்தது.

- Advertisement -

அதனை நாங்கள் நம்பிக்கையாக எடுத்துக் கொள்கிறோம். டெல்லி டெஸ்டில் நாங்கள் இந்தியாவை விட முன்னிலை பெற்று பிறகு இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடியாக விளையாடினோம். ஆனால் எதிர்பாராத வகையில் எல்லாமே சீக்கிரம் எல்லாம் முடிந்து விட்டது.எங்களுக்கு காத்துக் கொண்டிருக்கும் சவாலே, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை இழப்பது தான். அதனை மட்டும் நாங்கள் சரி செய்து விட்டால் நாங்களும் ரன் குவித்து வெற்றி பெறுவோம் என்று பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் கூறியுள்ளார்.