உலக கிரிக்கெட்

356 ரன்.. ஸ்டோக்ஸ் ஆர்ச்சர் போராட்டம்.. உடைத்துவிட்ட ஹெட் அதிரடி சதம்.. இங்கிலாந்து பரிதாப நிலை

தற்போது ஆஸ்திரேலியா அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆசஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஹெட் சதத்தில் வலிமையான நிலைக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு அலெக்ஸ் கேரி சதம் அடித்து 106 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

போராடிய ஸ்டோக்ஸ் ஆர்ச்சர்

இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியை கரையேற்ற போராடினார்கள்.

இந்த ஜோடி இறுதியாக 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. ஸ்டோக்ஸ் 86 ரன்கள் ஆர்ச்சர் 51 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் போலண்ட் இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

ஹெட் மீண்டும் சதம்

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு நான்காவது இடத்தில் வந்த கவாஜா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 40 ரன்கள் எடுத்தார். நான்கு விக்கெட்டுகள் மிக வேகமாக ஆஸ்திரேலியா அணி இழந்தது. இந்த நிலையில் ஒரு முனையில் வழக்கம் போல் அதிரடியில் தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தை அடித்தார். ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து 122 ரன்கள் ஆட்டம் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். ஹெட் 142, அலெக்ஸ் கேரி 52 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தெஆ 5வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீருக்கு ராணாவால் வந்த புது தலைவலி – தொடரை கைப்பற்றுவோமா?

இன்று மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 356 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. பேட்டிங் செய்ய ஒரு அளவுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழப்பது அந்த அணிக்கு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts