உலக கோப்பை இந்திய தொடருக்கு ஆஸி அணி அறிவிப்பு.. நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு அல்வா!

0
8474
Australia

இந்த ஆண்டு வரவிருக்கும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது!

இந்த உலகக் கோப்பை தொடருக்கு போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, கடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடர் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை போலவே, லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும். லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து இறுதிப் போட்டி மற்றும்
சாம்பியன் அணி கண்டறியப்படும்.

தற்பொழுது இந்த உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக விளையாட இருக்கும் ஒருநாள் தொடர்களின் மூலமாக, தங்கள் அணிகளின் தேவைகளை தீர்த்து முழுமையான அணியாக தயாராவதற்கு முனைப்புகள் காட்டுகின்றன.

இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய அணி அறிவித்திருக்கிறது. இந்தப் 18 பேர் கொண்ட அணியிலிருந்து உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தத் தொடர்களுக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக தொடர்கிறார். மூன்று வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். மேலும் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் இருக்கிறார்கள். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இருக்கிறார். பெரிய தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்படும் ஸ்டார்க் இருக்கிறார்.

ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் குட்டி ஸ்மித் என்று அழைக்கப்படும் மார்னஸ் லபுஷேனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் இந்தியாவில் உலககோப்பை தொடரை விளையாட மிகவும் எதிர்பார்த்து இருந்தார். ஸ்மித் இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.

தென்னாப்பிரிக்க, இந்திய மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி ;

பாட் கம்மின்ஸ் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ் , டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜம்பா.