“ஆஸி நேற்று தோத்ததுக்கு காரணம்.. இந்த 3 விஷயங்கள்தான்.. அவங்களால முடியல!” – அக்சர் படேல் சிறப்பு பேட்டி!

0
1289
Axar

ஆஸ்திரேலியா இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு அடுத்த மூன்று நாட்களில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இதில் ஆரம்பத்தில் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்கள் நாடு திரும்பினார்கள். இந்த நிலையில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஆறு வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களும் நாடு திரும்பினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய ஆஸ்திரேலியா அணியில் அனுபவ வீரர்களாக கேப்டன் மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட் மற்றும் டிம் டேவிட், பெகரென்டாப் நால்வர்தான் இருந்தார்கள். மீதி ஏழு வீரர்கள் சர்வதேச போட்டிஅனுபவம் பெரிதாக இல்லாதவர்கள்.

இந்தத் தொடர் முழுக்க பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்ற காரணத்தினால், நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

இருந்தாலும் கூட இந்திய அணி சிறப்பாக பந்து வீசி 174 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை 154 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அசத்தியது. மேலும் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அக்சர் படேல் ஆட்டநாயகன் ஆனார்.

- Advertisement -

இன்று அவர் பேசும்பொழுது “தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இது என் கையில் கிடையாது. இதனால் நான் அப்செட் ஆகி விட்டதாக மக்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. நான் சாதாரணமாக இருக்கிறேன். ரவீந்திர ஜடேஜா திரும்ப வந்து விட்டார். அதனால் நான் வெளியே அனுப்பப்பட்டேன்.

நான் அணியில் இல்லை என்ற வருத்தம் எனக்கு கிடையாது. நான் என்னை நிரூபிக்க வேண்டும். தேர்வுக்குழு என்னை தேர்வு செய்வது அவர்கள் பொறுப்பு. முதல் மூன்று போட்டிகளில் நான் செய்ததையே மீண்டும் செய்தேன். கிடைத்தவற்றில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் நாங்கள் கொஞ்சம் பேக் லென்த்தில் வீசினோம். பனிப்பொழிவு குறைவாக இருந்ததால் பந்து ட்ரையாக இருந்தது. இதனால் பந்தின் தையல்களில் ஈரம் கிடையாது. மேலும் ஆடுகளத்தில் சில இடங்களில் இருந்த புற்களில் பந்து படும்பொழுது வழுக்கி சென்றது. இது மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் இருவேறு வேகம் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் விளையாட முடியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!