322 ரன் இந்தியா முன்னிலை.. இங்கிலாந்து பாஸ்பாலை வேஸ்ட்பால் ஆக்கிய ஜெய்ஸ்வால்.. கில்லும் அசத்தல்

0
480
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளுக்குமே வழக்கமான ஆடுகளங்கள் இல்லாமல் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தொடர் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் வலிமையான நிலையில் இருந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்று, இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார்கள். ஏழாவது போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வால் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

தேனீர் இடைவேளை முடிந்து விளையாடிய இந்த ஜோடியில் திடீரென ஜெய்ஸ்வால் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த அவர், தொடர்ந்து சிறப்பாக விளையாடி 122 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் சதத்தையும் பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி வந்த கில்லும் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு திடீரென இடுப்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாட நினைத்தபோதும், ரோகித் சர்மா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை திரும்ப அழைத்துக் கொண்டார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார் சுலபமான பந்து ஒன்றில் மிக மலிவான முறையில் விக்கெட்டை பறிகொடுத்து ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மேற்கொண்டு களத்திற்கு நைட் வாட்ச்மேன் ஆக வந்த குல்தீப் யாதவ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் விளையாடியது போதும் உள்ளே வர சொல்லுங்க” – ரோகித் கண்டிப்பு.. காரணம் என்ன?

தற்போது சுப்மன் கில் 65(120), குல்தீப் 3(12) ரன்கள் என ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி தற்பொழுது இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தற்பொழுது இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. நாளை மேற்கொண்டு விளையாடி 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இந்திய அணி டிக்ளர் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.