29 ஓவர் 176 ரன்.. ஒரே செசனில் மேட்சுக்குள் வந்த இங்கிலாந்து.. பென் டக்கெட் ருத்ர தாண்டவம்

0
240
England

இங்கிலாந்தின் பாஸ்பால் பேட்டிங் அட்டாக்கிங் முறை மூன்றாவது டெஸ்டில் மீண்டும் திரும்ப வந்திருக்கிறது. இன்று இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.

நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 326 ரன்களை ஐந்து விக்கெட் இழப்புக்கு இந்தியா எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா 112, துருவ் ஜுரல் 46, ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ஆகியோர் இன்றைய நாளில் குறிப்பிடும்படி ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. ஜாக் கிரவுலி 28 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது 500ஆவது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது. இந்திய அளவில் அதிவேகமாகவும், உலக அளவில் இரண்டாவது அதிக வேகமாகவும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

இதற்கு அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. ஒல்லி போப் 55 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கிடையே அபாரமாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்கள் அடித்த அதிவேக சதத்தில் இது மூன்றாவது அதிவேக டெஸ்ட் சதமாக அமைந்தது. 84 பந்தில் ஆடம் கில்கிறிஸ்ட், 85 பந்தில் கிளைவ் லாயிட் ஆகியோர் இந்தியா அணிக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

இன்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆட்டம் இழக்காமல் பென் டக்கெட் 118 பந்துகளில் 21 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உடன் 133 ரன்களும், ஜோ ரூட் 13 பந்துகளில் 9 ரன்கள்வுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “இப்படிலாம் செஞ்சு விக்கெட் எடுக்கனுமா.. ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் எங்க அஸ்வின்? – அலைஸ்டர் குக் கேள்வி

இன்றைய போட்டியின் கடைசி செசனில் 29 ஓவர்கள் வீசப்பட்டது. இதில் மட்டும் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 176 ரன்கள் அடித்திருக்கிறது. ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு அதிகமாக அடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செசன் மூலமாகவே போட்டிக்குள் வந்துவிட்டதுதான் பாஸ்பால் சிறப்பு!