“இப்படிலாம் செஞ்சு விக்கெட் எடுக்கனுமா.. ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் எங்க அஸ்வின்? – அலைஸ்டர் குக் கேள்வி

0
508
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது மூன்றாவது போட்டி நடைபெற்ற வருகிறது.

இந்த மூன்று போட்டிகளிலும் இதுவரை பெரிதான சர்ச்சைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் இடையே சில பேச்சுவார்த்தைகள் இரண்டாவது டெஸ்டிலேயே ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

மற்றபடி டெஸ்ட் தொடரில் பெரிய அளவுக்கு வீரர்களிடையே எந்தவிதமான ஈகோ மோதல்களும் இல்லாமல் தான் நடந்து வருகிறது. இதே போல் டெஸ்ட் தொடர் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சுவாரசியத்துடன் நடைபெற்று வருகிறது.

ஆடுகளங்கள் வழக்கம் போல் சுழல் பந்து வீசிக்கு சாதகமாக அமைக்கப்படாமல் பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், இங்கிலாந்து பேட்டிங் செய்யும் முறைக்கு இது நன்றாக பொருந்தி வருகிறது.

எனவே போட்டிகள் குறைந்தபட்சம் நான்காவது நாளின் இறுதிக்கு செல்கின்றன. இரண்டு அணிகளும் சமமாக மோதிக் கொள்கின்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு நல்ல சுவாரசியமான கிரிக்கெட் போட்டி கிடைக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்யும்பொழுது பந்தை அடித்து விட்டு ஓடுவதற்கு முயற்சி செய்தார். அப்பொழுது அவர் டேஞ்சர் ஜோன் என்று கூறப்படும் பகுதியில் ஆடுகளத்தில் இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைத்திருந்தார். இதை ஜோ ரூட் நடுவரிடம் கூட, நடுவரும் இதைக் கண்டித்து இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி கொடுத்தார்.

இதையும் படிங்க : அஷ்வின் 500வது விக்கெட்.. அனில் கும்ப்ளே ஷேன் வார்னே சாதனைகள் முறியடிப்பு.. தனி ஒரு இந்தியராக முத்திரை

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் கூறும் பொழுது ” இது வேண்டுமென்றே நடந்ததா? என்று கேட்டால் ஆம் இது வேண்டும் என்று அஸ்வின் செய்ததுதான்.இது ஒரு தந்திரம். ஆடுகளத்தில் குறிப்பிட்ட பகுதிகள் சேதம் அடைவது அஸ்வின் பந்து வீசும் போது உதவி செய்யும். அதற்காக அவர் இப்படி செய்திருக்கிறார். இப்பொழுது இதில் ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப் இருக்கிறதா? இல்லை எங்கே போனது?” என்று கோபமாகக் கேள்வியை முன் வைத்திருக்கிறார்.