ஆசியன் கேம்ஸ்.. கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர்.. உணர்வுபூர்வமான செய்தியை அனுப்பிய தினேஷ் கார்த்திக்..!

0
4657
Sai

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் பெண்கள் என இரண்டு விதமான கிரிக்கெட் அணிகளையும் சீனாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் இடம் பெற்று இருக்கிறது. முதலில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஆகிய அணிகளும் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் லீக் சுற்றில் வென்று காலிறுதிக்கு வந்த நேபாள் அணியுடன் இன்று இந்திய அணி மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் சற்றுமுன் தனது முதல் சர்வதேச விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார். அணியில் இடம் பெற்ற அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார்.

- Advertisement -

சாய் கிஷோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து ட்விட் செய்துள்ள தினேஷ் கார்த்திக் “கடினமாக உழைக்கும் மக்களுக்கு அதை திரும்ப கொடுப்பதற்கான வழிகளை கடவுள் வைத்திருக்கிறார். இந்த நம்ப முடியாத வீரரான சாய் கிஷோர் உள்நாட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய முழுமையான ஒரு சூப்பர் ஸ்டார்.

காலையில் எழுந்து பிளேயிங் லெவனில் அவரது பெயரை பார்த்ததும் நான் உணர்ச்சிவசப்பட்டேன். சிலர் நன்றாக செயல்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். என்னுடைய பட்டியலில் இதில் முதலிடத்தில் அவர் இருக்கிறார்.

அவர் பேட்டிங்கை மேம்படுத்திய விதம் உங்களுக்கு அவர் குறித்த அனைத்தையும் சொல்கிறது. அவர் உண்மையில் ஒரு ஸ்ட்ரோக்லெஸ் ஆச்சரியமாக இருந்தார். மேலும் அங்கிருந்து எல்லா வடிவ கிரிக்கெட்டுக்கும் நம்பிக்கையான வீரராக மாறினார்.

அவரைப் பற்றி நிறைய பேச முடியும். ஆனால் இப்போதைக்கு அவர் இந்திய கிரிக்கெட் வீரராக மாறியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதை அவரிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. நல்லா போங்க சாய்!” என்று உருக்கமாக வாழ்த்தியிருக்கிறார்!