ஆசியன் கேம்ஸ்.. ருதுராஜ் கேப்டன்ஷியில் வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI..!

0
13767
ICT

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியா 13 தங்கப்பதக்கங்கள் பெற்று மொத்தமாக 50 பதக்கங்களை தாண்டி இருக்கிறது.

இந்தியா வாங்கிய 13 தங்கப்பதக்கங்களில் ஒரு தங்கப்பதக்கம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி பெற்ற தங்கப்பதக்கம் ஆகும்.

- Advertisement -

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய போட்டியில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறது. தற்போது பெண்கள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆண்கள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் சிறிய அணிகளை கொண்டு லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து நான்கு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு கொண்டுவரப்படும்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் நேரடியாக கால் இறுதி சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடத்தப்படும்.

- Advertisement -

மேலும் அரையிறுதியில் தோற்கும் அணிகள் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும் அணிகளில் வெல்லும் அணிக்கு தங்கப்பதக்கம் தோற்பும் அணிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ருதுராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த அணியில் வளரும் பல இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் லட்சுமணன் பயிற்சியாளராக இருக்கிறார். இந்திய நாளை கால் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி :

ருதுராஜ் கெய்க்வாட் (கே), முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (வி. கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி. கீ), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங்.

நாளைய போட்டிக்கான உத்தேச வலிமையான பிளேயிங் லெவன் :

ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங், ஆகாஷ் தீப்!