ஏசியன் கேம்ஸ்.. 6 பந்து 5 ரன்.. பரபரப்பான காலிறுதி.. இந்தியாவுடன் செமி பைனலில் மோதுவது யார்?

0
2443
Malaysia

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தற்பொழுது ஆண்கள் கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி தனது முதல் காலிறுதி போட்டியில் நேபாள் அணியை வென்றும், பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை வென்றும் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்து வெளியேறியது. மற்றும் ஒரு காலிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மலேசிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் மூன்று ரன்களுக்கு விட்டது.

இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷயிப் ஹசன் நிதானமாக விளையாடி 52 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார். அபிப் ஹுசைன் 23, சதாத் ஹுசைன் 21 ரன்கள் எடுக்க, பங்களாதேஷில் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய மலேசிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சையத் அசிஸ் 20 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மற்ற யாரும் அந்த அணிக்கு சிறப்பாக விளையாடவில்லை.

ஐந்தாவது வீரராக வந்த விராந்திப் சிங் அதிரடியாக விளையாடி மலேசிய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். மலேசிய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது.

இந்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்பொழுது ஏழு விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த விராந்திப் சிங் கடைசி ஓவரை எதிர்கொண்டார். எப்படியும் மலேசிய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அபிப் ஹூசைன் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் விராந்திப் சிங் ரன் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் தனது விக்கெட்டையும் பறி கொடுத்தார். இதற்கு அடுத்த இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது.

20 ஓவர்கள் முடிவில் மலேசிய அணியால் பரபரப்பான ஆட்டத்தில் 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 116 ரன்கள் எடுத்த பங்களாதேஷ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏழாம் தேதி பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறது.