ஆசிய கோப்பை.. நட்சத்திர இந்திய வீரர் ரூல்ட் அவுட்.. சாம்சனுக்கு அதிர்ஷ்டம்.. அணிக்கு பின்னடைவு!

0
14786
Samson

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, இந்திய அணி ஆறு ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடரில் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் நாளை ஆகஸ்ட் 30 ஆரம்பித்து செப்டம்பர் 17 வரையில் நடக்கிறது!

நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு கடந்த வாரத்தில் 17 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அஜித் அகர்கர் வெளியிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

- Advertisement -

அஜித் அகர்கர் வெளியிட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் சாகல் அதிரடியாக நீக்கப்பட்டார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருக்காத 20 வயதான இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் திரும்பி வந்தார்கள். கூடுதல் வேதபந்துவீச்சாளராக காயத்தில் இருந்து திரும்பிய பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். அறிவிக்கப்பட்ட இந்த இந்திய அணியில் பிரதான ஆப் ஸ்பின்னர்கள் யாரும் கிடையாது. சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணி உடன் 18-வது நபராக பயணிப்பார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட இந்த அணி குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் நடைபெற்று வந்தது. அதில் முக்கியமான விவாதமாக சஞ்சு சாம்சன் இடத்தில், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பாக செயல்படாத சூரிய குமாரை தேர்வு செய்தது இருந்தது. மேலும் காயம் அடைந்து நீண்ட நாட்களாக விளையாட வீரர்கள் முக்கியமான தொடரில் எப்படி நேரடியாக வந்து விளையாடுவார்கள்? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு விஷயங்களுக்கும் சேர்த்து ஒரு அறிவிப்பு வெளியில் வந்திருக்கிறது. என்னவென்றால் காயத்தில் இருந்து திரும்பி இருந்தாலும், சிறியதாக நிக்கில் இருக்கின்ற காரணத்தால், ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் ரூல்டவுட் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது பேக்கப் வீரராக அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சன் முக்கிய அணிக்குள் நுழைகிறார். மேலும் கே.எல். ராகுல் இடத்தில் இஷான் கிஷான் விளையாடுவாரா? அல்லது சாம்சன் விளையாடுவாரா? என்பது தெளிவாகவில்லை. ஆனால் ஒரு கூடுதல் வாய்ப்பு சாம்சனுக்கு இருக்கவே செய்கிறது.

- Advertisement -