ஆசியக் கோப்பை.. சச்சினின் ஸ்பெஷல் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா புதிய இரண்டு சாதனைகள்!

0
672
Rohit

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் மழை ஒருமுறை எல்லோரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இன்று இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் போட்டியில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது!

ஏற்கனவே முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மலையின் காரணமாக வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆனது. இருதரப்பு ரசிகர்களை மட்டுமல்லாது இருதரப்பு அணி நிர்வாகங்களையும் இது கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது சுற்றிலும் மழை குறுக்கிட்டு ஏமாற்றி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்தப் போட்டிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் டே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் தற்பொழுது ரசிகர்கள் மழை நின்று மீண்டும் போட்டி துவங்குமா? என்று பிராத்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் அணுகுமுறை யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் அதிரடியாக இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகின் ஷா அப்ரிடிக்கு என்ன செய்வது? என்று புரியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா மற்றும் இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்கள்.
அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 16.4 ஓவர்களில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 52 பந்தில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா அதிரடியாக 49 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஆசியக் கோப்பையில் இந்த அரைசதத்தை எட்டியதன் மூலம் ரோஹித் சர்மா சச்சின் சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார். அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக்கோப்பையில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் ஆறு அரைசதங்கள் அடித்து இருக்கிறார். மேலும் ஆசியக்கோப்பையில் ஒரு ஆசியா அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையும் இதில் வருகிறது.

ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு அரைசதங்கள்.
சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு எதிராக ஐந்து அரைசதங்கள்.
குமார் சங்கக்கரா இந்தியாவுக்கு எதிராக ஐந்து அரைசதங்கள்.
சனத் ஜெயசூர்யா பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஐந்து அரை சதங்கள்.