பாகிஸ்தானுக்கு போனது 8 விக்கெட்.. ஆனால் இந்தியா வெற்றி.. காரணம் என்ன?.. ஆசிய கோப்பையில் நடந்த வினோதம்!

0
9628
ICT

நேற்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த போட்டியில், இந்தியா அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது!

இந்த போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் என்கின்ற வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. இது பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகபட்ச ரன் வித்தியாச வெற்றியாகும்.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை இருந்த இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறது. ஆனால் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ரன் ரேட்டில் மிகவும் பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றால் இறுதிப் போட்டிக்கும் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்தது. அதே சமயத்தில் அதிரடியாக விளையாடி 356 ரன்கள் குதித்தது. நேற்று விளையாடிய இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றவில்லை. நேற்று முன்தினம் ரோகித் சர்மா, கில் ஆட்டம் இழந்தது மட்டுமே தொடர்ந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி 32 ஓவரின் முடிவின்போது பாகிஸ்தான் அணி எட்டாவது விக்கெட்டை இழந்ததும், இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

உண்மையில் என்ன நடந்தது என்றால், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சின் போதே களத்திற்கு வரவில்லை. மேலும் நேற்றைய நாளின் பந்துவீச்சின் போது நசிம் ஷா காயம் அடைந்து இருந்தார்.

எனவே இவர்கள் இருவரும் காயம் அடைந்திருந்த காரணத்தினால், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த பொழுது ஒன்பதாவது மற்றும் பத்தாவது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய வரவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் எட்டாவது விக்கெட் விழுந்ததும், இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

இன்று இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது நாளாக, இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு நேரடியாகவே தகுதி பெற்றுவிடும். எனவே இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது!