“ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து மாற்றப்படும் விவகாரம் “- அப்துல் ரசாக் வெளியிட்ட கருத்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி!

0
3590

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது . சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி t20 உலக கோப்பையில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது இதில் கடைசி பந்தில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது .

2008 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் உறவிலும் விரிசல் ஏற்பட்டது . கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி இரண்டு முறை மட்டுமே இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறது 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடியது . மேலும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கும் பாகிஸ்தான் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது .

- Advertisement -

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பையை நடத்தும் உரிமைகளை பாகிஸ்தான் அணி பெற்றிருக்கிறது . ஆனால் அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடியாத சூழலில் உள்ளது . இதன் காரணமாக போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஐசிசி இடம் கோரிக்கை வைத்தது இந்திய அணி . இது தொடர்பான இறுதி முடிவுகள் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் .

சில தினங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடான பகுதியினில் வைத்து பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நதிம் சேத்தி ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில் ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணியால் பங்கேற்க முடியாத சூழலை ஜெய்ஷா விளக்கியுள்ளார். ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட்டால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் .

இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது கிரிக்கெட்டிற்கு ஒரு ஆரோக்கியமான விஷயம் என தெரிவித்துள்ளார் . இதுகுறித்து பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் ” இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் தான் ஐசிசி உலகக் கோப்பை போன்ற போட்டிகளுக்கும் கிரிக்கெட்டிற்கும் தூதர்களாக விளங்குகின்றன. மேலும் இந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு ஆரோக்கியமான விஷயமே . இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்பது நீண்ட காலம் நடந்து வரும் ஒன்று . அதை இரண்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் அமர்ந்து தொடர்ந்து பேசி வருவதன் மூலம் தான் தீர்க்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் முன்னால் வீரரிடம் இருந்து இது போன்று ஒரு கருத்து வந்திருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .