ஆசிய கோப்பை: ஜெயிக்க போறது இந்தியாவா? பாகிஸ்தானா?.. தைரியமாய் பதில் சொன்ன ரிஸ்வான்.. ரசிகர்கள் பாராட்டு!

0
9001
Rizwan

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை முன்பாகவே, ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் காய்ச்சல் பெரிய அளவில் பரவ ஆரம்பித்திருக்கிறது!

காரணம், 16ஆவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆசியக் கோப்பை தொடர் இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை,ஆப்கானிஸ்தான் இந்த ஐந்து அணிகளோடு நேபாள் அணியும் இந்த ஆசியக் கோப்பை தொடரில் தகுதி பெற்று கலந்து கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஒரு குழுவாகவும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு குழுவில் உள்ள அணிகள் அதே குழுவில் உள்ள அணியுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். இரண்டு குழுவிலும் தங்களது குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும்.

இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டிகளில் மோதும். இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டியில் வெல்லும் அணி ஆசிய சாம்பியன் ஆகும்.

- Advertisement -

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை எடுத்துக் கொண்டால், 1984 ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியா ஏழு முறையும் இலங்கை ஆறுமுறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கின்றன. நடப்பு சாம்பியனாக இலங்கை இருக்கிறது.

நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்த முறை யார் வெல்வார்கள் என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் இடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையான பதிலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து முகமது ரிஸ்வான் கூறும்பொழுது “எங்கள் அணி நன்றாக இருக்கிறது. அவர்களுடைய அணியுமே. எங்கள் இரு அணிகளுக்குமே பலம் மற்றும் பலவீனம் இருக்கிறது. இது உலகம் முழுக்க பார்க்க வேண்டிய விரும்புகின்ற அழுத்தம் மிக்க போட்டி.

வீரர்களை நட்சத்திர வீரராகவும் வழக்கமான வீரராகவும் பிரிக்க கூடியது அனுபவம்தான். அனுபவமே அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறது. அழுத்தத்தை சிறப்பாக அனுபவம் இருப்பவர்களால்தான் கையாள முடியும். வெளிப்படையாக யார் அழுத்தத்தை சிறப்பாக கையாளுகிறார்களோ அவர்களே வெல்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!