ஆசிய கோப்பை.. ரோகித் சர்மாவை கிண்டலடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. கோபத்தில் விளாசும் ரசிகர்கள்!

0
878

பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆசியாவைச் சார்ந்த ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் மற்றொரு போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு புள்ளிகளை பெற்றனர். ரசிகர்களின் பலத்தை எதிர்பார்ப்பிற்கு இடையே  நேற்று கண்டியில் துவங்கிய இந்த போட்டியில்  கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது . அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஷாஹீன் அப்ரிதி வீசிய பந்தில் போல்டாகி 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 ரன்களிலும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலா பத்து மற்றும் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஐந்தாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் இசான் கிசான் சிறப்பாக விளையாடிய இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர்.

இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட் இருக்கு 138 ரன்கள் சேர்க்க 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா வலுவான நிலைக்கு முன்னேறியது. இசான் கிசான் 82 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் ஆட்டம் இழந்த பிறகு பின் வரிசை ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டம் இழந்ததால் 48.5 ஓவர்களில் 266 ரண்களுக்கு ஆள் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிதி 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது பேட்டிங்கை துவங்குவதற்கு முன்பாக கன மழை பெய்ததால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷாஹீன் அப்ரிதி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட் துவக்கத்திலேயே வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த விதத்தை வைத்து அவரை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் சென்னை 600028 திரைப்படத்தின் மீம்ஸ் தமிழக மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பதிவு செய்திருந்தார். ஏற்கனவே ரோகித் சர்மாவையும் தமிழ் சினிமா நடிகரான மிர்ச்சி சிவாவையும் இணைத்து ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா போல்டாகி வெளியேறியதற்கு சென்னை 600028 திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கிரிக்கெட் விளையாடும் போது போல்டான புகைப்படத்தை ஒப்பீடு செய்து பத்ரிநாத் மீம்ஸ் பதிவு செய்திருந்தது ரசிகர்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .

இது தொடர்பாக தமிழக அணி மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கிரிக்கெட் விளையாடும் போது அவுட் ஆகும் புகைப்படத்தையும் ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் அவுட் ஆன புகைப்படத்தையும் வைத்து ஒரே மாதிரி இருக்கக்கூடிய இரண்டு பேர் நான் ஆட்களை சொல்லவில்லை அவர்கள் விளையாடிய ஷாட்டை சொன்னேன் என மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு முன்னால் வீரராக இருந்து கொண்டு இந்திய அணியின் கேப்டனை இப்படி உருவாக்கியலி செய்யலாமா என ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றனர்.