ஆசிய கோப்பை.. தோனியின் 12 வருட மெகா சாதனையை செய்த இஷான் கிஷான்.. மேலும் ஒரு புதிய ரெக்கார்டு!

0
532
Ishan

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை கண்டி மைதானத்தில் முதல் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது!

பாகிஸ்தான அணி தனது முதல் போட்டியில் நேபாள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி முதல் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது!

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரது இடத்தில் சர்துல் தாக்கூர் இடம் பெற்றார்.

இந்த நிலையில் ஆரம்பத்தில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் பொறுமையாக ஆரம்பிக்க நான்கு ஓவர்கள் முடிந்திருக்க மழை குறுக்கிட்டது.

மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்க, ஷாகின் ஷா அப்ரிடி மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்பி வந்தார். ரோஹித் சர்மா 12 ரன், விராட் கோலி 4 ரன் என இருவரையும் கிளீன் போல்ட் செய்து அனுப்பி வைத்தார்.

- Advertisement -

இவருக்கு அடுத்து ஹாரிஸ் ரவுப் ஸ்ரேயாஸ் ஐயரை 14 ரன்னிலும், சுப்மன் கில்லை 10 ரன்னிலும் பெவிலியன் அனுப்பி வைத்தார். இந்திய அணி மிகப்பெரிய நெருக்கடியில் சிக்க இசான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டது. இருவரும் சேர்ந்து அரைசதம் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் அரை சதம் அடித்தார். இது அவருக்கு தொடர்ச்சியான ஒரு நாள் கிரிக்கெட் நான்காவது அரை சதம் ஆகும்.

இதற்கு முன்பு மகேந்திர சிங் தோனி 2011 ஆம் ஆண்டு நான்கு அரை சதங்கள் தொடர்ந்து அடித்திருக்கிறார். தற்பொழுது மகேந்திர சிங் தோனியின் இந்த சாதனையை விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் முறியடித்து இருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் இந்திய இடது கை வீரர் அரை சதம் அடிப்பது இது இரண்டாவது நிகழ்வாகும். தற்பொழுது இந்திய அணி 32 ஓவரில் 160 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழப்புக்கு விளையாடிக் கொண்டிருக்கிறது!