ஆசிய கோப்பை ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு… 2100 நாட்கள் மேல் கழித்து ODI அணிக்கு திரும்பும் ஆல்ரவுண்டர்!

0
3914
Afghanistan

ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பைக்கு நல்ல முறையில் தயாராகும் விதமாக இலங்கையில் வைத்து பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமீபத்தில் விளையாடி முடித்திருக்கிறது!

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒரு போட்டியை கூட ஆப்கானிஸ்தான் அணி வெல்லவில்லை. ஆனாலும் அந்த அணியின் பலம் மற்றும் பலவீனம் இரண்டையும் அவர்கள் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு இந்த தொடர் உதவி இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சு கூட்டணி மிகவும் அபாரமாக இருக்கிறது. அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் பெரிதாக வெளிப்படவில்லை.

இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடர் இந்த மாதம் ஆகஸ்டு 30 ஆம் தேதி பாகிஸ்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி மூலம் துவங்குகிறது.

தற்பொழுது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை தற்பொழுது அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இந்த அணியில் ஆறு வருடங்களுக்கு பிறகு வலதுகை மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கரீம் ஜனத் இடம் பெற்று இருக்கிறார். இவர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். இவர் ஒரே ஒரு நாள் போட்டியில் மட்டுமே 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக அறிமுகமானார். 49 சர்வதேச டி20 போட்டிகள் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியிருக்கிறார்.

ஆசிய கோப்பை ஆப்கானிஸ்தான் அணியில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி உடன் வாய் தகராறில் ஈடுபட்ட நவீன் உல் ஹக் இடம்பெறவில்லை. அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரன், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷீத் கான், குல்பாடின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷரபுதீன் உர்ரஃப், முஜீப்தீன் அஷ்ரஃப், அகமது, முகமது சலீம் சஃபி, ஃபசல்ஹாக் பாரூக்கி.

ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்த முறை ஆப்கானிஸ்தான் அணி மற்றும் அணிகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவே செயல்பாட்டை காட்டி இருக்கிறது. தற்போது பங்களாதேஷில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது!