அரையிறுதியில் ஒற்றை ஆளாக போராடிய யாஷ் தூல்.. மற்ற வீரர்கள் சொதப்பல்..ஆசிய கோப்பை ஏ தொடரில் மீண்டும் பாக். உடன் மோதலா?

0
5637

எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ இலங்கை ஏ பாகிஸ்தான் ஏ வங்கதேசம் ஏ உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று இருக்கின்றன.

இந்த தொடரில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதியில்  வங்கதேச அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். எனினும் சாய் சுதர்சன் மூன்று பவுண்டரிகளை அடித்து 24 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பொறுமையாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 34 ரன்களில் வெளியேற நிகின் ஜோஷ் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து ஐந்து ரன்களிலும் ஐபிஎல் வீரர் ரியான் பராக் 12 ரன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துருவ் ஜுரல் ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் ஹங்கர்கேகர் 15 ரன்கள், மனோவ் சுதர் 21 ரன்கள் சேர்த்தனர்.

இப்படி அனைத்து வீரர்களுமே தடுமாறிய நிலையில் ஒருவர் மட்டும் இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார். கேப்டனாக களமிறங்கிய யாஷ் தூல் கில்லி போல் நின்று சொல்லி வைத்து அடித்தார்.

- Advertisement -

யாஷ் தூல் இன்றைய ஆட்டத்தில் சொதப்பி இருந்தால் இந்திய ஏ அணி 150 ரன்களிலேயே சுருண்டு இருக்கும். ஆனால் அவர் தனி ஆளாக நின்று அரை சதம் அடித்தார். 85 பந்துகளை எதிர்கொண்ட யாஸ் தூல் 66 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். கடைசிவரை யாஸ் தூல் மட்டுமே நின்று விளையாடினார். இதனால் 49 புள்ளி ஒரு ஓவரில் இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது வங்கதேச அணியின் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மெகதி ஹசன் இந்த தொடரில் களமிறங்கி 10 ஓவர்கள் வீசி 39  ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மற்ற அனைத்து அணிகளுமே சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களை இந்த தொடரில் சேர்த்து இருக்கும் நிலையில் இந்திய அணி மட்டும்தான் முற்றிலும் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்களை தேர்வு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.