இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2025 ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட சர்ச்சைகளை தாம் எதிர்கொண்டது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். தடுப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தது முக்கிய பேசுபொருளாக அமைந்தது.
இந்த நிலையில், இரு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளனர். இந்திய அணி குழு ஏ வில் மூன்று வெற்றிகளுடன் முதலிடம் பிடித்து முன்னேறியது, அதேசமயம் பாகிஸ்தான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
சூர்யகுமார் அறிவுரை:
இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டியை எதிர்கொள்ளும் போது, வெளியே எழும் சர்ச்சை எதிர்கொள்வது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார்,
“உங்கள் அறையை மூடுங்கள், உங்கள் தொலைபேசியை அணைத்துவிட்டு, தூங்குங்கள். இது தான் சிறந்தது என்று நினைக்கிறேன். இதைச் சொல்வது எளிது.”
“ஆனால் சில நேரங்களில் இது கடினமாக இருக்கிறது. ஏனெனில் நீங்கள் நிறைய நண்பர்களைச் சந்திக்கிறீர்கள். வெளியே இரவு உணவிற்குச் செல்கிறீர்கள். நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்கள், உங்கள் மனதில் எதை வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.”
இரைச்சலை அடைத்து விடுங்க:
“நான் அனைத்து வீரர்களிடமும் மிகவும் தெளிவாக இருந்தேன். இந்த தொடரில் நன்றாக செயல்பட வேண்டுமெனில், மற்றும் எதிர்காலத்திலும், வெளியில் இருந்து வரும் நிறைய இரைச்சலை அடைத்து விட வேண்டும். முற்றிலும் இரைச்சலை அடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.ஆனால் உங்களுக்கு நல்லது எது என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.”
இதையும் படிங்க: பிசிசிஐ-யிடம் திடீர் உதவி கேட்ட ஒமான் கேப்டன்.. சூர்யா செய்த நெகிழ்ச்சியான காரியம்.. ரசிகர்கள் பாராட்டு
“யாராவது நல்ல அறிவுரைகளையும் கொடுக்கலாம். அது உங்கள் ஆட்டத்தில் உதவலாம்.” என்று சூர்யகுமார் கூறினார். இந்திய அணி ஆசிய கோப்பை 2025 இல் எதிர்பாராத வகையில் ஓமன் அணியிடமிருந்து கடுமையான சோதனையை எதிர்கொண்டது. இந்திய அணி ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தியை இந்த போட்டிக்கு ஓய்வு அளித்தது. மேலும் 189 ரன்கள் என்ற பெரிய இலக்கை தற்காத்து கொள்ள சற்று தடுமாறியது. இதனால் இந்தியா ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லை என்ற உத்வேகம் மற்ற அணிகளுக்கு கிடைக்கும்.






