பிசிசிஐ-யிடம் திடீர் உதவி கேட்ட ஒமான் கேப்டன்.. சூர்யா செய்த நெகிழ்ச்சியான காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

0
171
Surya

நேற்று ஆசிய கோப்பையில் தங்களது போட்டி முடிவுக்கு பின்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஓமான் கேப்டன் ஜதீந்தர் சிங் உதவி கேட்டிருக்கிறார். இவர் இந்தியாவிலிருந்து ஓமான் சென்று விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆசியக் கோப்பையில் இந்தியா ஓமான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஓமான் அணி சிறப்பான முறையில் விளையாடியிருந்தது. அந்த அணியில் இரண்டு வீரர்கள் அரை சதங்கள் அடித்தார்கள். ஒரு கட்டத்தில் வெற்றி பெறுவதற்கான சிறு வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆப்கானின் இரண்டாவது ஹோம்

தற்போது ஆசியாவில் சிறந்த அணியாக உருவெடுத்திருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் வளர்வதற்கு இந்தியாவும் இந்திய கிரிக்கெட் வாரியமும் நிறைய உதவிகள் செய்திருக்கிறது. மேலும் அவர்களுக்கு சொந்த மைதானங்கள் இல்லாத காரணத்தினால் இந்திய மைதானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓமான் கிரிக்கெட் வளர்ச்சிக்காகவும் தங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உதவி செய்ய வேண்டும் என அந்த அணியின் கேப்டன் உருக்கமான முறையில் கேட்டிருக்கிறார். அதே சமயத்தில் போட்டி முடிந்த பிறகு ஓமான் கிரிக்கெட் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டை அணுகும் விதம் குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் நீண்ட நேரம் உரையாடினார். அந்த அனுபவம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

நாங்களும் வளர்வோம்

இதுகுறித்து ஓமான் கேப்டன் பேசும்போது ” எங்களுக்கு இந்தியாவை இரண்டாவது ஹோம் ஆக மாற்றிக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால், அதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசிக்கிறேன். இந்தியா சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்வதால் எங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலன்கள் கிடைக்கும்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் சென்னையில 7வது டிவிஷன் டீம்.. அதை பெரிய நாடுகளோட ஆட வைக்கக் கூடாது – ஸ்ரீகாந்த் கருத்து

“இதனால் எங்களுடைய மனநிலை, உடல் தகுதி மற்றும் திறமைகள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்தியாவில் உள்ள ரஞ்சி விளையாடும் அணிகளுடன் மற்றும் கிளப் அணிகளுடன் டி20 கிரிக்கெட் விளையாடுவதின் மூலமாக எங்களுடைய திறமை மற்றும் அனுபவம் வளரும். நாங்கள் அசோசியேட் கிரிக்கெட் நாடு. எங்களுக்கு பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காது. அதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த உதவி செய்தால் பெரிய விஷயமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -