ஆசிய கோப்பையில் வெடித்த முதல் சர்ச்சை.. சூர்யகுமார் செய்த செயல்.. ரசிகர்கள் கோபம்.. இது தேவையா?

0
10

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அறிமுக விழாவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கைக்குலுக்கியதால் சர்ச்சை வெடித்தது. செப்டம்பர் 9 அன்று துபாயில் கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியுடனும், பாகிஸ்தான் தலைவர் சல்மான் ஆகாவுடனும் கைகுலுக்கி சிரித்து பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கைக்குலுக்கிய சூர்யகுமார்:

இந்தியா பாகிஸ்தானை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்புற பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்தப் போட்டியே நடைபெற கூடாது என்று ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல், இந்தியாவை மிரட்டும் வகையில், பாகிஸ்தான் அமைச்சர் பலமுறை பேசி இருக்கிறார். இதனால், நக்வி மீது ஏற்கனவே இந்திய தரப்பு ரசிகர்கள் கோபத்தில் இருந்த நிலையில், அவருடன் சூர்யகுமார் கைகுலுக்கி இருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள் கோபம்:

மோஷின் நக்வியை சூர்யகுமார் புறக்கணித்து, தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சூர்யகுமார் தவறு செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சைகள் எழும் என்பதால் தான் இந்த தொடரில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தாங்கள் கூறி வந்ததாக ரசிகர்கள் குறை கூறியுள்ளனர். லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இந்திய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தானை புறக்கணித்தது போல் இளம் வீரர்களும் செய்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 9 அன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுவதுடன் தொடங்குகிறது, இந்தியாவின் பயணம் செப்டம்பர் 10 அன்று யுஏஇ-யை எதிர்கொள்வதுடன் தொடங்குகிறது. மேலும், பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. ரசிகர்கள் முக்கியமாக செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது.

- Advertisement -