கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆசிய கோப்பை 2025: இந்திய அணி தேர்வுக்கான தேதி வெளியானது.. 2 ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு வழங்க திட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை வரும் ஆகஸ்ட் 19, செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் அவரது குழு நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய கில், ஆசிய கோப்பைக்கான டி20 அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான புதிய தகவலின் படி, டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இறுதி அணியில் இடம்பெறமாட்டார் என தெரிகிறது.

கில், பும்ரா ஓய்வு:

ஏனெனில் இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சனை நிலைநிறுத்த விரும்புகிறது. அதேநேரம் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் விளையாடுவார். எதிர்பார்க்கப்படும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்குவார், இதனால் டி20 அமைப்பில் கில்லுக்கு இடம் கிடைப்பது கடினம்.

இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா தனது பணிச்சுமை மேலாண்மை காரணமாக இந்தத் தொடரில் ஓய்வு எடுக்கவுள்ளார். அவரது இடத்தில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார் என்று தெரிகிறது. யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

- Advertisement -

அட்டவணை மற்றும் குரூப் போட்டி:

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 2023 ஆம் ஆண்டு 50 ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா, நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகியவற்றுடன் ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது. லீக் சுற்றில், இந்த அணிகளுக்கு எதிராக ஒருமுறை விளையாடும்.

இதையும் படிங்க: இந்த வீரரை எடுக்க சொல்லி அனைத்து ஐபிஎல் அணிகளிடம் கெஞ்சினேன்.. என் பேச்சை யாரும் கேட்கல-அஸ்வின்

லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், இந்தியா சூப்பர் ஃபோர் நிலைக்கு முன்னேறும்.லீக் அட்டவணையில் முதல் ஆட்டம் செப்டம்பர் 10 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக நடைபெறும். அடுத்த ஆட்டம், செப்டம்பர் 14 அன்று துபாயில் பரம எதிரியான பாகிஸ்தானுடனான மோதுகறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி செப்டம்பர் 19 அன்று ஓமனுக்கு எதிரான ஆட்டத்துடன் முடிக்கும்.

- Advertisement -
Published by

Recent Posts