இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அஷ்வின் அபார பந்துவீச்சு; வெல்லுமா இந்திய அணி?

0
368
ICT

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க கிளம்பியது.

இந்தியாவில் இருந்து கிளம்பிய இந்திய அணி நேராக மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் முகாமிட்டது. மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இன்று 2வது பயிற்சி போட்டி நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த பயிற்சி போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், சாகல் மூவருக்கும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீச 8 ரன்கள் வந்தது. அடுத்த ஓவரை வீசிய அர்ஸ்தீப் விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து மேற்கு ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து அடுத்த ஐந்து ஓவர்களுக்கு நாற்பத்தி ஒன்பது ரன்கள் குவிக்கப்பட்டது. 15 ஓவர்கள் முடிவில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து அஷ்வின் வீசிய ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையை உருவாக்கியது. அரைசதம் அடித்து களத்தில் நின்ற இரண்டு மேற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்தார். அதோடு அதே ஓவரில் இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் மேற்கு ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் தடைபட்டது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 32 ரன்கள் விட்டுக்கொடுத்து அஷ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சல் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். அர்ஸ்தீப் மூன்று ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். தீபக் ஹூடா 2 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அக்ஷர் படேல் 3 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -