அஷ்வின், சாஹர் தேவை இல்லை ; டி20 உலகக் கோப்பைக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் தேர்ந்தெடுத்துள்ள 3 ஸ்பின்னர்கள்

0
170

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் மூன்று ஸ்பின் பந்து வீச்சாளர்கள் கேம் சேஞ்சர்களாக இருக்கப் போகிறார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இந்த மூவரும் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுப்பார்கள்

- Advertisement -

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் , ராகுல் சஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பங்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்பொழுது உள்ள ஸ்பின் பந்துவீச்சாளர்கள் மத்தியில் சஹால் அதிரடியான பார்மில் இருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே நிச்சயமாக அவர் இந்திய அணியில் இடம் பெறப் போகிறார். அவருக்கு அடுத்தபடியாக குல்திப் யாதவ் 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவரும் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவார்.
இவர்கள் இருவரை கடந்து அக்ஷர் பட்டேல் மற்றும் ரவி பிஷனோய் ஆகியோரும் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ரவீந்திர ஜடேஜாவும் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெறுவார். மற்ற அணிகளில் வேகப்பந்து வீச்சு எந்த அளவுக்கு தரமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு இந்திய அணியிலும் தரமான வேகப்பந்து வீச்சு உள்ளது. இருப்பினும் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி நிறைய வெற்றிகளை கண்டுள்ளது.

- Advertisement -

எனவே ஸ்பின் பந்து வீச்சில் இனி இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இரண்டு மேட்ச் வின்னிங் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் நிச்சயமாக இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியில் விளையாட வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் மூவரும் இணைந்து இந்திய அணியில் விளையாடினார் நிச்சயம் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.