வீடியோ: இது என்னோட ஏரியாடா.. சொல்லிவச்சு ஒரே ஓவரில் நம்பர் 1 & நம்பர் 2 பேட்ஸ்மேன்களை தூக்கிய அஸ்வின்!

0
3780

ஒரே ஓவரில் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை தட்டித்தூக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்கியது. இந்திய அணி ஒரேயொரு மாற்றத்தை மட்டுமே செய்து ஆடிவருகிறது. சூரியகுமார் யாதவ் வெளியில் அமர்த்தப்பட்டு மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளே வந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களாக வார்னர் மற்றும் கவாஜா இருவரும் களமிறங்கினர். கடந்த போட்டியை போல அல்லாமல் இம்முறை இவர்களது அணுகுமுறை மிகவும் நிதானமாகவும் துல்லியமாகவும் இருந்தது.

ஆரம்பத்தில் வார்னர் திணறி வந்தாலும் அதன் பிறகு சுதாரித்து இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு வந்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. 15 ரன்கள் அடித்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஜானே ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்தில் எல்பிடபிள்யூ முறைப்படி ஆட்டம் இழந்து வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார். இவர் 18 ரன்கள் அடித்திருந்தார்.

லபுஜானே ஆட்டம் இழந்த பிறகு உள்ளே வந்த ஸ்டீவ் ஸ்மித் முதல் டெஸ்ட் போட்டி போன்று இம்முறையும் நிதானமாக விளையாடி சில நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்த்து இருந்தபோது, அஸ்வினின் அதே ஓவரில் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேற 91 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி திணறியது.

உணவு இடைவேளையின்போது, கவாஜா 50 ரன்களும் மற்றும் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி 94 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளைக்குபிறகு, ஆட்டத்தை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆஸி., அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து ஆடிவருகிறது. கவாஜா 53 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம் 6 ரன்களுடனும் களத்தில் ஆடிவருகின்றனர்.

ஒரே ஓவரில் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்களை அஸ்வின் வீழ்த்திய வீடியோ: