‘ க்ளீன் பவுல்டு ‘ ஆனதற்கு ரிவ்யூ – அஷ்வினின் புதிய விதிமுறையா ? என்று ரசிகர்கள் நகையாடுதல்

0
945
Ashwin Signalling DRS for Clean Bowled

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த டி20 தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளையும் வென்றது. சீனியர் வீரர் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. மூன்று முக்கிய ஸ்பின்னர்கள் இருந்ததால் முதலாவது டெஸ்ட் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த போது அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி நியூஸிலாந்து அணிக்கு டிரா செய்து கொடுத்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புவதில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடாத ரகானே அணியிலிருந்து நீக்கப்பட்டார் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு. நீண்ட காலமாக சதமடிக்காத விராட் கோலி இந்த போட்டியில் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் டக் அவுட் ஆகி வெளியேறினார் கோலி. இருந்தாலும் மனம் தளராத மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் கடந்தார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு நேற்று விழுந்த 4 விக்கெட்டுகளையுமே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் எடுத்திருந்தார். சகா அஸ்வின் போன்ற பேட்டிங் வரிசை நீளமாக இருந்ததால் இந்திய அணி எளிதாக பெரிய ஸ்கோரை எட்டும் என்று ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தை அப்படியே தொடர்ந்த அஜாஸ் பட்டேல் விரைவாகவே நேற்று விளையாடிக்கொண்டிருந்த சகாவை அவுட் ஆக்கினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் முதல் பந்திலேயே பவுல்ட் முறையில் அவுட்டானார்.

விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததால் தான் ஆட்டம் இழந்தேன் என்று நினைத்துக்கொண்ட ரவி அஸ்வின் உடனடியாக இதற்கு ரிவீயு செய்தார். ஆனால் இது பவுண்ட் முறையில் விழுந்த விக்கெட் என்று மயங்க் அகர்வால் கூறியதால் பெவிலியன் நோக்கி நடையை தொடர்ந்தார் அஸ்வின். இதுவரை விழுந்த 6 விக்கெட்டுகளையுமே அஜாஸ் பட்டேல்தான் வீழ்த்தியுள்ளார் என்பதால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது முறையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.