இது இந்திய அணியின் வாத்தி கம்மிங் – இணையத்தை கலக்கும் அஸ்வினின் வைரல் வீடியோ

0
412
Ashwin,Kuldeep and Hardik Pandya

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மோசமான முதல் டெஸ்டின் தோல்விக்கு பின் இரண்டாம் டெஸ்டில் பாகுபலியை போல பிரம்மாண்ட வெற்றியை இந்தியா பெற்றது.

தற்போது 1 – 1 என்கிற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த தொடரில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் வாரத்தில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இதனிடையே அகமதாபாத்தில் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர. பயிற்சியின் நடுவே தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியயுள்ளனர்.

இந்த வீடியோவை அஷ்வின் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிடுள்ளார். தற்போது இந்த விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.