நேத்து ஆடறப்ப கோலி இதை என்கிட்ட கேட்டாரு.. நான் உஷாரா பிளான இப்படி மாத்திட்டேன் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

0
3776
Ashwin

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வின், களத்தில் விராட் கோலி உடன் நடந்த ஒரு உரையாடல் பற்றி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றியில் பந்துவீச்சில் அஸ்வின் புத்திசாலித்தனமாக செயல்பட்டது மிகவும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆர்சிபி அணி மிகச் சிறப்பாக விளையாடிய 6 போட்டிகளை வென்றதில், ரஜத் பட்டிதார் ஸ்பின்னர் களை மிடில் ஓவர்களில் தாக்கி விளையாடியது முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ரஜத் பட்டிதாரை அடிக்க விடாமல், மைதானத்தில் லெக் சைடு பெரிய பக்கமாக இருந்ததால், அஸ்வின் புத்திசாலித்தனமாக பந்தை அவரது உடம்புக்குள்ளேயே வீசி, அவரை தன் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருந்தார். இதன் காரணமாக ஆர்சிபிக்கு சரியான நேரத்தில் ரன்கள் கிடைக்கவில்லை.

இதேபோல ஆரம்பத்தில் அவர் விராட் கோலிக்கும் ஒரே திட்டத்துடன் சென்றார். இதனால் அவரும் இவரிடமிருந்து பவுண்டரிகள் ஏதும் அடிக்கவில்லை. மேலும் சிறப்பாக விளையாடி வந்த கேமரூன் கிரீனை அவுட் ஆக்கிய அடுத்த பந்தில், மேக்ஸ்வெல்லை கோல்டன் டக் அடிக்க வைத்து வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி அணி சரியான ஸ்கோரை நிர்ணயிக்க முடியாமல் மாட்டிக் கொண்டது.

இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நேற்று விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஓவரின் ஐந்தாவது பந்தில், எக்ஸ்ட்ரா கவரில் உள்வட்டத்தில் நின்ற பீல்டரை பவுண்டரி எல்லைக்கு அப்படியே நேராக அனுப்பிவிட்டேன். டீப் பாய்ண்டில் பவுண்டரி எல்லையில் இருந்த பீல்டரை, உள்வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தினேன். என்னிடம் வந்த விராட் கோலி “ரொம்ப தற்காப்பா இருக்க” என்று சொன்னார்.

- Advertisement -

இதையும் படிங்க : அம்பதி ராயுடு ஆர்சிபிக்கு போட்ட உள்குத்து வீடியோ.. கமெண்டில் பதிரனா செய்த சம்பவம்.. என்ன காரணம்?

மேலும் தற்பொழுது இம்பேக்ட் பிளேயர் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் கூட, உங்களைப் போன்ற பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் பந்தை நன்றாக அடித்து விளையாடும் ஹிட்டர்களாக எதிர்காலத்தில் இருக்க வேண்டும். என் கருத்துப்படி பேட்டர்கள் பெரிய நம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகமெங்கும் நல்ல ஆடுகளங்கள் போடப்படுகின்றன. நாங்கள் பந்து வீசுவது உடன் பந்தை அடித்து விளையாடும் தகுதியுடன் இருக்க வேண்டும். விளையாட்டு தற்பொழுது அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.