கில் எப்படி தெரியுமா?.. கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுருச்சு.. பையனுக்கு உதவ காத்திருக்கேன் – வில்லியம்சன் பேட்டி

0
372
Gill

நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் என இந்த நான்கு அணிகளை சுற்றிதான் பேச்சுகள் பெரிய அளவில் இருந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதும், ஆர் சி பி பெண்கள் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதால், ஆர் சி பி ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை ஐபிஎல் தொடரில் வெல்லுமா? என்கின்ற பேச்சுகள் இரு அணிகளை சுற்றிலும் நிறைய இருக்கின்றன.

- Advertisement -

இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில், தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருப்பதும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டு இருக்கின்ற காரணத்தினாலும் இந்த அணிகள் குறித்த பேச்சும் அதிகமாக இருக்கிறது.

ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் கேன் வில்லியம்சன்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா பேட்டிங் வரிசையில் மேலே வந்து, இன்னிங்சை நகர்த்தி பினிஷர்கள் கையில் கொடுத்து நல்ல வேலையை செய்திருந்தார். தற்பொழுது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த வேலையை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிய கேப்டன் சுப்மன் கில் பற்றி கேன் வில்லியம்சன் பேசும் பொழுது “முதலில் கில் ஒரு உலக தரமான பேட்ஸ்மேன். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடன் சிறிது நேரம் செலவிட்டேன். இந்த ஐபிஎல் சீசனில் இந்த வருடம் அவருடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன்.

- Advertisement -

என்னால் முடிந்த அல்லது கில் விரும்பும்படி நான் அவரை ஆதரிக்கவும் அவருக்கு உதவி செய்யவும் காத்திருக்கிறேன். ஆனால் இறுதியில் கில் தன்னைத்தானே ஆதரிப்பவராகவும், தனக்கு உண்மையாக இருப்பவராகவும் இருக்கக்கூடியவர். மேலும் அவருக்கு அணியில் எல்லோரும் ஆதரவாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

இதையும் படிங்க : எனக்கு மூணு பேர் இருக்காங்க.. கேப்டன் பதவி பத்தி எந்த கவலையும் கிடையாது – சிஎஸ்கே ருதுராஜ் பேட்டி

சில ஆண்டுகளாக அணியில் எங்களுக்கு நல்ல துணை ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர்கள். நாங்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய கிரிக்கெட் அறிவு அவர்களுக்கு இருக்கிறது. இது சுப்மன் கில் தனது கேப்டன் பதவியை தொடங்குவதற்கு உற்சாகமானமற்றும் இனிமையான சூழல்” என்று நான் நினைக்கிறேன்.